வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (14:25 IST)

இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் மட்டுமே இருப்பார்கள் – மேற்கு வங்கத்தில் அமித் ஷா முழக்கம் !

மக்களவைத் தேர்தலை அடுத்து மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாகக் குடியேறிவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித்ஷா தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கூட்டத்தில் பேசிய அவர், ’மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் கரையான்களைப் போன்றவர்கள். ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய உணவுகளை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். வேலை வாய்ப்புகளையும் அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளை பாஜக கைப்பற்றியவுடன் திருணமுல் காங்கிரஸின் வீழ்ச்சி தொடங்கும். இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்களைத் தவிர நாட்டுக்குள் சட்டவிரோதமாக புகுந்த அனைவரையும் நாங்கள் வெளியேற்றுவோம். இந்து மற்றும் பவுத்த அகதிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கி அவர்களை இந்நாட்டு மக்களாக்குவோம். சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தவர்களைத் தவிர இந்தியாவின் உண்மையான குடிமக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதால் கூர்க்காக்களுக்கு எவ்வித அச்சமுமில்லை.’ எனக் கூறியுள்ளார்.

அமித் ஷாவின் இந்த பேச்சால் சிறுபான்மையின மக்கள் மற்றும் அகதிகள் கலக்கமடைந்துள்ளனர்.