வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளை தகுதிநீக்கம் செய்யணும் –பிரச்சாரத்தில் கார்த்தி !

Last Modified சனி, 13 ஏப்ரல் 2019 (10:35 IST)
அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நடிகர் கார்த்தி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளை தகுதி நீக்கம் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திரையுலகினர் பலர், பல அரசியல் கட்சியில் இணைந்தாலும் பிரச்சாரத்தில் ஒருசிலர் மட்டுமே களத்தில் உள்ளனர். அந்த வகையில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்திக்
 
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் மனோஜ் பாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கார்த்திக் ’தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றனர். அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை தேர்தல் ஆணையம் பதிவு செய்யவேண்டும். ஆட்சி அமைத்து 5 ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளை தகுதி நீக்கம் செய்யவேண்டும். நாட்டின் நலனுக்காகவே தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும்’ எனக் கூறினார்.இதில் மேலும் படிக்கவும் :