ஊழல் பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது ? - ஸ்டாலின் கேள்வி

stalin
Last Updated: புதன், 20 மார்ச் 2019 (13:28 IST)
தமிழகத்தில் அனல் பரக்கும் தேர்தல் பிரசாரத்தை அனைத்து கட்சிகளும் செய்து வருகின்றன.தேசிய கட்சிகள் மாநில ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் கூட தம் பங்குக்கு திராவிட கட்சிகளுடன் ஒட்டிக்கொண்டு கூட்டணியாகப் பங்கு வகித்து வருவதை நம்மால் காணமுடிகிறது.
இந்நிலையில் அதிமுகவின்  மெகா கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பாஜகவை விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
 
இன்று திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
 
’ஊழல் செய்பவர்களுடன் பிரதமர் மோடி கூட்டணி அமைத்து இருப்பது வெட்கக்கேடானது. ஊழலைப் பற்றி பேசுவதற்கு இனி  என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.’


இதில் மேலும் படிக்கவும் :