வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 அக்டோபர் 2018 (16:10 IST)

ராபேல் போர் விமான ஊழலில் மோடி மெளனம் சாதிப்பது ஏன்? - வீடியோ

ராபேல் போர் விமான ஊழலில் பிரதமர் மோடி தொடர் மௌனம் சாதிப்பது ஏன என கரூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் கேள்வி எழுப்பினார்.

 
கரூரில், காங்கிரஸ் கமிட்டியின் கலந்தாய்வு கூட்டம், கோவை சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற வருகை தந்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளருமான சஞ்சய் தத், கட்சியின் வளர்ச்சி குறித்து தொண்டர்களிடையே உரையாற்றினார். 
 
பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, சஞ்சய் தத், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, முழுவதுமாக, பொதுமக்களை ஏமாற்றக்கூடிய வகையிலும், வஞ்சிக்கும் வகையிலும் உள்ளது. தற்போதைய தமிழகத்தின் அ.தி.மு.க அரசு, முழுவதுமாக பா.ஜ.க கட்சியினால் கட்டுப்படுத்தக்கூடிய அரசாக உள்ளது. பிரதமர் மோடி, ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக வாய்திறக்காமல் இருந்து வருகின்றார்.
 
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இது குறித்து விவாதிக்க தயாரா? என்று அழைப்பு விடுத்திருந்தும் இன்று வரை பிரதமர் மோடவாய்திறக்க வில்லை. இந்துஸ்தான் ஏர்லைன்ஸ்சிற்கு ரபேல் விமான ஒப்பந்தம் கொடுக்காமல், அம்பானிக்கு கொடுத்தது ஏன்? இதற்கு பல கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது” என அவர் குற்றம் சாட்டினார்.
- சி. ஆனந்த குமார்