1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. பரபரப்பு சம்பவம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (18:47 IST)

மயிலாடுதுறை நகராட்சியில் 19- வது வார்டு தேர்தல் ஒத்திவைப்பு!

மயிலாடுதுறை நகராட்சியில் 19- வது வார்டு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
முன்னதாக அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணம் காரணமாக காஞ்சிபுரம் 36-வது வார்டில் நகர்ப்புற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 36-வது வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சியில் 19- வது வார்டு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி உயிரிழந்ததை அடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.