புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. பரபரப்பு சம்பவம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (14:00 IST)

வேட்பாளர்கள் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக நிர்வாகி மரணம்

காஞ்சிபுரத்தில் நடந்த வேட்பாளர்கள் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக நிர்வாகி சந்தானம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம். 

 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி சனிக்கிழமையன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி சந்தானம் என்பவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். 
 
இதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டு காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.