வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By சினோஜ்
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (23:38 IST)

முகத்தில் என்றும் இழையோடும் புன்னகை

வாழ்க்கையில் ஆயிரம் ஆனந்தமிருக்கும்…ஆயிரம் ஏமாற்றங்களிருக்கும் இதையெல்லாம் தாண்டிச்செல்லும் மனப்பக்குவம் தான் நம்மை சாதா மனிதன் நிலையிலிருந்து நம்மைத்தூக்கியெடுத்து ஒரு பக்குவப்பட்ட மனிதன் ஸ்தானத்தில் கொண்டுபோய்வைக்கிறது.

ஆனால் எதாவதொரு சந்தர்ப்பத்தில் நாம் தோல்வியடைந்தாலோ அல்லது நம் நம்பிக்கைக்குரியர்களால் நாம் ஏமாற்றப்பட்டாலோ துரோகத்தின்பிடியில் அகப்பட்டாலோ நாம் உடனே மனம் வெதும்பிப் போய்விடுகிறோம். உலகமே பேரிக்கையாய்போல் இரண்டாம் பிளந்துவிட்டதுபோல் துன்பத்தூண்மீது தலையை இடித்து ரத்தம்வரும்வரை மோதிக்கொள்கிறோம்.

நமக்கெதிராகக் கிளம்பியவர்களுக்கு எதிராக நாமும் கண்ணுக்குக்கல்,பல்லுக்குப்பல் என்று செயல்படவேண்டுமென்பதில்லை. நமக்கு எதிராகச் செயல்படுவர்களுக்கு முன்பு நமது தன்னப்பிக்கைத்தோளுயர்த்தி நனது நமது தைரியநெஞ்சை பாரதிபோல் நிமிர்த்திச்சென்று முகத்தில் சூரியனைப்போல் புன்னகைக்கதிர்களை வீசினாலே போதும்… எதிரிகளின் கொட்டம் எல்லாம் வெட்கத்தில் மதிமண்டிப்போய் விட்டத்தில் தூக்குப்போட்டுவிடும்.

இன்று எதர்க்கெடுத்தாலும் நாம் நன்றாகயில்லையென்றால் உடனே அடுத்தவர்களைக் கெடுக்கின்ற பிழைப்பு பயிர்களூடே உள்ள களைகளாக திமிர்ந்தெழுகிறது. இதையெல்லாவற்றையும் நாம் கடனே என்று கடந்துபோக முடியாதே என்பது உங்களின் தன்மானத்தின் மீசை துடிப்பதிலேயே தெரிகிறது. ஆனால் தொட்டதற்கெல்லாம் தொண்டைகிழிய கத்திக்கொண்டு சண்டைக்கும், எடுத்தஎடுப்புக்கெல்லாம் சானம்பிடித்த கத்தியைக் கையிலெடுத்துக்கொண்டு பிரச்சனைக்கும் சென்றுகொண்டிருந்தால் நமெப்பது பிள்ளைக்குட்டிகளுடன் நிம்மதியாகப் பொழுதைக்கழிக்க முடியும்.

வாழ்வின் சாரம்சமென்பது நிலவுபோன்ற அமைதிதானே ஒழிய ஜப்பானில் எந்நேரமும் தீக்கக்கிக் கொந்தளிக்கிற புக்குஷிமாவைபோன்ற எரிமலை அல்ல.

நம் எதிரியில் நமது எதிரியே வந்தாலும்கூட ஒரேஒருமுறை நம் பற்பசைச் சுண்ணாம்புதீட்டிய வெள்ளைக்குண்டுப் பற்களைக்கொண்டு சிரித்துப்பாருங்கள்….அதன்பின்,எதிரிக்ள் நமக்கு எதிரானச் சூழ்ச்சிச்செய்ய சதித்திட்டங்கள் தீட்டாமலேயே தமக்குள்ளே புகைந்துகொண்டு குழம்பித்திரிவார்கள்…

நாம் நீண்டநாட்களுக்கு முன் படித்த ஒரு கதையின்று என் ஞாபகவாசலில் பால்குடிக்கவரும்  ஒரு பூனைபோல்வந்து நுழைகிறது.

ஒரு சண்டை நடக்கும் இடத்தில் ஒரு ஜென் துறவி நின்றிருக்கிறார். அப்போது அச்சண்டையில் எல்லோரையும் அடித்து வீழ்த்திவிடுகிறார். அதன்பின்னர், எல்லோரது பார்வையும் தற்காப்புக் கலை வல்லுநரான அந்த ஜென் துறைவியின் மீது பாய்கிறது. ஆனால் அவர் எதையும் வெளிக்காட்டாமல் ஒரு சாதுவைபோல் நின்றுகொண்டிருக்கிறார். உடனே அந்த பயில்வான் அவனை வம்புக்கு இழுத்து, அவரை சண்டைநடக்கும் இடத்திற்கு வம்படியாக இழுத்துவருகிறான்.

பயில்வான் தனக்குத் தெரிந்த வித்தைகள் எல்லாவற்றையும்காட்டுவதற்கு முன் தன் உடல்பலத்தை ஊரறிய அம்பலப்படுத்துகிறான்..

ஜென் துறவின் கீழே நின்றிந்ததை விடம்வும் மிகவும் அமைதியாக மேடையில் அவனுக்கு முன் துணிச்சலுடன் நின்றிருந்தார். அவரைப் பார்த்த பயில்வான் சற்று மிரண்டுதான் போனான். ஏனென்றால் அவன் முன் எல்லோரும் நடுங்குவதைத்தான் பார்த்திருக்கிறானே தவிர இவர் போன்று தைரியாக நிற்பதை அல்ல…

பின்னர், பயில்வான் அவரைத்தாக்க வரும்போது, ஜென் துறவின் தான் கற்றுகொண்ட வித்தைகளை எல்லாம் ஆயுதமாகப்பயன்படுத்தி அவனை வீழ்த்தினார்.

இதையடுத்து,அவரிடம் அவ்வளவு பெரிய பயில்வானை வீழ்த்தியது எப்படி எனக் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர், நம் பயத்தை எதிராளிகள் தெரியும்படி காட்டிக்கொள்ளக்கூடாது. துணிந்துவிட்டால் எதுவும் துரும்பு என்ற எண்ணத்தில்தான் அவனை அணுகினேன். நான் முதலிரண்டு அடிகளை வாங்கினேன். ஆனால் அவன் என்னிடமுள்ள தைரியத்தைக் கண்டு நிலைகுலையும்போது, அவனை நான் தாக்கி  வெற்றி பெற்றேன்…நாம் நிதானம் இழக்காமல் இருந்ததே இந்த வெற்றிக்கு காரணம்…ஒரு செயலில் வெற்றிப்பெற பலம் முக்கியமல்ல.அதை செய்துமுடிக்க நம்மை எப்படித்தயார் செய்கிறோம் என்பதுதான் வெற்றியின் முக்கால்பங்கு அடங்கியுள்ளது என்றார்…

அதாவது நிதானம் இழக்காதே நீ பிறரை ஆளலாம் எனக் கடைசியாகக் கூறினார்.

நாமும் எந்தச்சூழ்நிலையில் நமது தன்னம்பிக்கை ஒளிரும் பார்வையுடன் முகத்தில் இழையோடும் துணிச்சலுடன் விவேகமுள்ள சிந்தையுடன் செயல்பட்டால் வெற்றியே நம்மைத்தேடி நாடி வந்து  நம்மைச் சரண்டையும்.


சினோஜ்