வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (20:25 IST)

மரங்கள் அது நம்மைக் கைவிடாது காக்கும் ஆபத்தில் உதவும் உயிர்த்தோழன்…

மரங்கள் அது நம்மைக் கைவிடாது காக்கும் ஆபத்தில் உதவும் உயிர்த்தோழன் மாதிரி என்பதை இனியாவதும் மனபூர்வமாக நாம் உணர்வோம்.

ஆறறவு மனிதன் கூட அதிக வேற்றுமை  பார்க்கின்ற இந்த உலகில் தன்னை தீண்டவரும் மிருகங்கள்,பூச்சிகள்,போன்ற சகல உயிர்வாழ்விகளுக்கும் தன் இலை,தளை, பட்டை,வேர், பழம்,  கொட்டை, விதைகள் போன்வற்றை தந்து உலக உயிர்கள் சுபிட்சத்துடன் வாழ வழிவகை செய்வது மரங்கள் தான்.

ஏனெனில் இந்த உலகம் முதலில் தோன்றியதாக அறிஞர்கள் கருதுகின்ற ஆப்ரிக்காவில் உள்ள பூர்வ குடிகள் எல்லாம் குரங்கு வடிவத்தில்  வனத்தில்தான் பிறந்து இருந்தனர் என்று ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. அதனால் ஒருமனிதனுக்கு பணம்  இல்லையென்றாலும், பொருள் இல்லையென்றாலும் இந்த வனத்தை நம்பினால் போதும் எப்படியாவதும் பிழைத்துக்கொள்ளலாம் என்பதையே இவை எடுத்தியம்புகின்றன.

ஏனெனில் மரங்களின் ஒப்பற்ற சேவை பற்றி நாம் அறிவோம். தற்போது பெருகிவிட்ட வாகன இறைச்சல்களை இந்த வனங்கள் உள்வாங்கிக்கொண்டு  ஒலி இறைச்சலிலிருந்து நமது ஆரோக்கியத்தைப் பாதுக்காக்கின்றது. இதெல்லாவற்றிற்கும் மரங்களே பிரதானம்.
அதற்கு நாம் செய்யவேண்டியது சமண மதக்கொள்கைகளை இந்த மரங்களின் மேல் காட்டுவதாகும்.அதாவது பிற உயிர்களைப்போல இந்த மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என்பதேயாகும்.

அதுவே இவ்உலகம் தலைமுறை கடந்து வாழ உதவும்.வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று இல்லாமல் ஆளுக்கு ஒரு, மரம் வளர்த்து மழைவளம் பெறுவோம் என்ற பேரில் ,இயற்கையின் இயல்பான பேரழிவு விதியிலிருந்து நாம் நம்மையும் நமது அற்புதமான பேருலகையும்  காப்பற்றுவோம்.

வாழ்க மரம் ...வாழ்க  வனம் ..வாழ்க நம் மரம் வளார்ப்பு குணம்.