திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (20:17 IST)

விஷாலின் ‘துப்பறிவாளன் 2’ குறித்த முக்கிய அறிவிப்பு!

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கி வந்த ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகியதாக கூறப்பட்டது. மிஷ்கின் விஷாலிடம் அதிக பணம் கேட்டதாகவும் இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது 
இந்த நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் மீதி பகுதியை விஷாலே இயக்குவார் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ள புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது
 
விஷால் தனது சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்டரில் ‘துப்பறிவாளன் 2’படத்தின் இயக்குனராக விஷால் பெயரும் இசையமைப்பாளராக இளையராஜா பெயரும் மட்டுமே உள்ளது. மிஷ்கின் பெயரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து மிஷ்கின் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது