தொடர்புடைய செய்திகள்
- ’’லியோ’’ படத்தில் விஜய் ஷூட்டிங் எப்போது நிறைவு? லோகேஷ் கனகராஜ் தகவல்
- வாயில் சிகரெட்டுடன் விஜய்…. ‘’நா ரெடி’’ லியோ பட முதல் சிங்கில் பற்றிய அப்டேட்!
- வாரிசு பட 3 வது சிங்கில் 'Soul Of Varisu ' ரிலீஸ்
- ''உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே''! விஜய்யின் '' வாரிசு ''முதல் சிங்கில் ரிலீஸ்!
- முதல் முறையாக தொலைக்காட்சியில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்… வெளியான அறிவிப்பு
வெளியானது விஜய் பாடிய "நா ரெடி" பாடல் ப்ரோமோ வீடியோ!
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மேல் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் இடம்பெற்றுள்ள நான் ரெடி பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த பாடலில் விஜய்யோடு மன்சூர் அலிகான், அர்ஜுன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டவர்களோடு 2000 டான்ஸர்கள் ஆடியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அனிருத் இசையில் விஜய்யே எழுதியுள்ள இந்த பாடலை லோகேஷின் இணை இயக்குனர் விஷ்ணு எடாவன் எழுதியுள்ளாராம். இவர் ஏற்கனவே லோகேஷின் மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். இந்நிலையில் சற்றுமும் இப்பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தளபதியின் விஜய்யின் குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் ப்ரோமோவை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
