வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 20 ஜூன் 2023 (16:28 IST)

’’லியோ’’ படத்தில் விஜய் ஷூட்டிங் எப்போது நிறைவு? லோகேஷ் கனகராஜ் தகவல்

லியோ படத்தில்  நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட ஷூட்டிங் எப்போது நிறைவடையும் என்று  இயக்குனர் லோகேஷ் கனகராஜ்   கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் மாஸ்டர் படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் லியோ.

இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படத்தின் வேலைகள் மும்முரமாக  நடைபெற்று வருகிறது.

 
பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தியுள்ள இப்படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ லலித்குமார் தயாரித்து வரும் நிலையில்,   இப்படம் வெளியீட்டிற்கு முன்பே  இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ. 350 கோடிக்கு வியாபாரமாகியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ,விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கில் ''நா ரெடி''  என்ற பாடல்  வெளியாகும் என்று நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தங்கள்   டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, லியோ படத்தின் புதிய போஸ்டர்  வெளியிட்டனர். இது வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:  ‘’ நிறைய படங்கள் இயக்க வேண்டும். இந்த இடத்தில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்ற திட்டம் எனக்கில்லை.  லோகேஷ் யுனிவர்ஸ் முயற்சித்ததற்கு நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.    இந்த எல்.சியுவில் 10 படங்கள் இயக்கிவிட்டு நான் அதிலிருந்து  வெளியேறிவிடுவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’இன்னும் 10 நாட்களில் லியோ படத்தில் விஜய் உடனான ஷூட்டிங் நிறைவடைய உள்ளது. இப்படம் எல்.சி.யுவில் வருமா என்பதைக் காண அடுத்த 3 மாதங்கள் காத்திருங்கள்’’  என்று தெரிவித்துள்ளார்.