செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (09:02 IST)

கோப்ரா அப்டேட் – ஏ ஆர் ரஹ்மான் அளித்த இன்ப அதிர்ச்சி!

கோப்ரா படத்தின் முதல் சிங்கிள் பாடலான தும்பி துள்ளல் ஜூன் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

விக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.  ஆனால், கொரோனா ஊரடங்கினாள் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு விலக்கப்பட்டதும் ரஷ்யாவுக்கு சென்று இறுதிகட்ட படப்பிடிப்பை முடிக்க இருக்கிறது கோப்ரா படக்குழு.

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான தும்பி துள்ளல் பாடலை ஏ ஆர் ரஹ்மான் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியிட இருக்கிறார். கொரோனாவுக்கு பின் முதலில் வெளியாகும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்தபடத்தை டிமாண்டி காலணி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க, லலித்குமார் தயாரித்து வருகிறார். விக்ரம் இந்த படத்தில் 20க்கும் மேற்பட்ட கெட் அப்களில் தோன்ற இருக்கிறார்.