’சர்வர் சுந்தரம்’ படம் அவ்வளவுதானா? அதிர்ச்சி தகவல்!

server sundharam
’சர்வர் சுந்தரம்’ படம் அவ்வளவுதானா?
Last Modified புதன், 12 பிப்ரவரி 2020 (22:47 IST)
சந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை அறிவிக்கப்பட்டிருந்தும் ஒரு முறை கூட அறிவிக்கப்பட்ட தேதியில் அந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிப்ரவரி 14ல் ’சர்வர் சுந்தரம்’ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸாகும் என மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ’சர்வர் சுந்தரம்’படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன. இந்த படத்தின் மீது அதிக அளவில் கடன் இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்க்க முடியாத அளவிற்கு பின்னிப் பிணைந்து இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

மேலும் இந்த படம் ரிலீஸ் ஆக கூடாது என்று கேவியட் மனு போட 40க்கும் மேற்பட்டோர் தயாராக இருப்பதாகவும் விரைவில் இவர்கள் நீதிமன்றம் சென்றால் இந்த படம் ரிலீஸாக வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ’சர்வர் சுந்தரம்’ திரைப்படம் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகி இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இனிமேல் அந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்றும் இந்தப் படம் இன்னொரு மதகஜராஜா படம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன


இதில் மேலும் படிக்கவும் :