திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (15:47 IST)

இதென்னடா சிவ நடிகர் படத்துக்கு வந்த சோதனை?

சிவ நடிகர் படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போவதால், காரணம் புரியாமல் தவிக்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.
 



சிவ நடிகரும், பெரிய நம்பர் நடிகையும் இணைந்து, சூப்பர் ஸ்டார் நடித்த படத்தின் தலைப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸாகும் என்று சொல்லித்தான் ஆரம்பித்தனர். ஆனால், அன்று தல நடிகரின் படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டதால், ஆயுத பூஜைக்கு ரிலீஸை மாற்றினர்.

ஆனால், ஆயுத பூஜை ரிலீஸில் இருந்தும் படம் தள்ளிப் போயிருக்கிறது. கதைத் திருட்டு உள்ளிட்ட சிலபல சிக்கல்களில் படம் மாட்டியிருப்பதால் தான் ரிலீஸ் தாமதம் என்கிறார்கள். தீபாவளிக்கு தளபதி படம் ரிலீஸ் ஆவதால், டிசம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் சிவ நடிகர்.