1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Murugan)
Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (15:15 IST)

மலையாள நடிகரை அவமதித்த ‘சிவ’ நடிகர்..

போஸ்டரில் மலையாள நடிகரின் பெயரைப் போடாமல் அவமரியாதை செய்துள்ளனர் சிவ நடிகர் உள்ளிட்ட படக்குழுவினர். 


 

 
உச்ச நட்சத்திரம் படத்தின் தலைப்பில் சிவ நடிகர் நடித்துள்ள படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரிய நம்பர் நடிகை ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, பிரபல எடிட்டரின் மூத்த மகன் இயக்கியுள்ளார்.
 
இந்தப் படத்தில், மலையாள நடிகர் ஒருவர் வில்லனாக நடித்துள்ளார். சில தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்து பல உள்ளங்களைக் கொள்ளைகொண்ட நடிகையின் கணவர் இவர். இவருக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால், அதில் மலையாள நடிகரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
 
இத்தனைக்கும் மலையாளத்தில் முன்னணி நடிகர் அவர். எனவே, அவருக்குண்டான மரியாதையைத் தர வேண்டாமா? ஆனால், அப்படி அவர் பெயரையும் போட்டால், இருவருக்கும் சமமான கேரக்டராக இருக்கக் கூடும் என மக்கள் நினைப்பார்கள். எனவே, அவர் பெயரைப் போடாமல் தவிர்க்கும்படி கூறிவிட்டாராம் சிவ நடிகர்.