ஒரு ரூபாய்க்கு இட்லி விற்ற ஊராட்சி மன்ற தலைவர்! திருச்சி அருகே சூப்பர் ஐடியா!

Last Updated: திங்கள், 4 மே 2020 (14:27 IST)

திருச்சி அருகே உள்ள வெங்கடாஜலபுரம் எனும் பகுதியின் ஊராட்சி தலைவர் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்றுள்ளார்.

ஊரடங்கு காரணமாக கைவிடப்பட்டவர்களும், ஆதரவற்றவர்களும், மாற்று திறனாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நகரங்களிலாவது இவர்களைப் போன்றவர்களுக்கு குறைவான விலையில் உணவு வழங்க அம்மா உணவகங்கள் போன்றவை உள்ளன.

ஆனால் கிராமப்புறங்களில் இவர்களுக்கு எந்த ஆதரவும் இல்லை. இந்நிலையில் திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே வெங்கடாஜலபுரம் பஞ்சாயத்து தலைவரான பழனிசாமி,இது போன்றவர்களுக்கு உதவும் விதமாக ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என காலை உணவை வழங்கி வருகிறார்.

அவரின் இந்த செயல் ஊர் மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :