திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 மே 2020 (13:23 IST)

200 ரூபாய் கொடுத்தால் என்னுடன் நடனம் ஆடலாம்! கொரோனாவுக்கு நிதி திரட்டும் ஸ்ரேயா!

கொரோனாவுக்காக திரை பிரபலங்கள் வித்தியாசமான முறையில் நிதி திரட்ட ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் நடிகை ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.

இப்போது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவரும் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகின்றனர். சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களிடம் ஆர்வமாக உரையாடி வரும் ஸ்ரேயா சரண், இப்போது வித்தியாசமான முறையில் கொரோனாவுக்கு நிதி திரட்டும் முடிவில் இறங்கியுள்ளார்.

சென்னை டாஸ்க் போர்ஸ், தி கைண்ட்நெஸ் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகளுடன் கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ள ஸ்ரேயா, இந்த அமைப்புகளுக்கு ரூ 200 கொடுத்து அதன் ரசீதை அனுப்ப வேண்டும் என்றும், அதில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் தன்னுடன்  நடனம் அல்லது யோகா செய்யலாம் எனக் கூறியுள்ளார்.