பிரபல தயாரிப்பாளருக்கு லவ் லெட்டர் எழுதிய ஷகிலா!

Last Modified புதன், 6 மார்ச் 2019 (08:30 IST)
கடந்த 90களில் மலையாள திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை ஷகிலா. அம்மாநில சூப்பர் ஸ்டார்களின் மோகன்லால், மம்முட்டி படங்களை விட இவருடைய படங்கள் அதிக வசூலை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷகிலா கடந்த சில ஆண்டுகளாக தமிழில் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமும் உருவாகி வருகிறது

இந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் ஷகிலா, பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு காதல் கடிதம் எழுதியதாகவும், ஆனால் அவருடைய காதல் கடிதத்தை அந்த தயாரிப்பாளர் கண்டுகொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது

கடந்த 2007ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த 'சோட்டா மும்பை' என்ற படத்தில் ஷகிலா நடித்து கொண்டிருந்தபோது திடீரென அவருடைய தாயாருக்கு உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது 'சோட்டா மும்பை' தயாரிப்பாளரிடம் ஷகிலா உதவி கேட்க, அவருக்கு அந்த படத்தில் பேசிய மொத்த பணத்தையும் கொடுத்து உதவியுள்ளார். இதனால் அவர் மீது ஈர்ப்பு கொண்ட ஷகிலா அவருக்கு காதல் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது

ஆனால் இந்த தகவலை அந்த தயாரிப்பாளர் மறுத்துள்ளார். ஷகிலாவுக்கு சேர வேண்டிய சம்பளத்தை மட்டுமே தான் கொடுத்ததாகவும், மற்றபடி அவர் மீது எனக்கோ என்மீது அவருக்கோ காதல் என்பதெல்லால் கிடையாது என்றும், ஷகிலாவிடம் இருந்து தனக்கு எந்த காதல் கடிதமும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்இதில் மேலும் படிக்கவும் :