வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : புதன், 27 பிப்ரவரி 2019 (10:53 IST)

காதல் மனைவியை போலீசில் மாட்டிவிட சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல்: கணவன் கைது

காதல் மனைவியை போலீசில் மாட்டி விடுவதற்காக , சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் போலீசில் சிக்கினார். 



 
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு மர்ம போன் வந்தது. அந்த நபர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னி என்ற இளம்பெண் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
 
இதையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர் ஆனால் அங்கு வெடிகுண்டு ஏதும் இல்லை. அது வதந்தி என்பது போலீசாருக்கு தெரியவந்தது. 
 
இதையடுத்து வதந்தியை பரப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த சரவணன் என்பது போலீசாருக்கு விசாரணையில் தெரிய வந்தது. 
 
தேனாம்பேட்டை போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் தான் முன்னி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே தன் காதல் மனைவியை போலீசில் மாட்டி விடுவதற்காக வெடிகுண்டு மிரட்டல் விட்டதாக தெரிவித்தார்.