பிரிந்த கணவருடன் மீண்டும் சேரும் சமந்தா...? நோயால் ஏற்பட்ட நெருக்கம்!
மீண்டும் இணையும் சமந்தா நாகசைத்தாயா!
தென்னிந்திய சினிமா ரசிகர்களின் பேவரைட் ஜோடியான சமந்தா நாகசைதன்யா இருவரும் சுமார் 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
பின்னர் டேட்டிங், அவுட்டிங், டின்னர் அவுட், பார்ட்டி என பிசியாக ஊர் சுற்றி திருந்து வந்த இருவரும் 2017ம் ஆண்டும் கோலாகலமாக திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இந்த திருமண உறவு 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட்டது.
ஆம், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனிடையே சமந்தா மயோசிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். அவரை நாகசைதன்யா நேரில் சென்று பார்த்து இருவரும் சேர்ந்து வாழ்வது குறித்து பேசினார்களாம். ஆனால், இது உறுதிப்படுத்தாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.