புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By siva
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (18:56 IST)

’ஆன்ட்டி இந்தியன்’ படத்தின் தடைக்கு ரஜினி காரணமா? பிரபல தயாரிப்பாளரின் சர்ச்சை டுவீட்!

ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ’ஆன்ட்டி இந்தியன்’ என்ற திரைப்படம் சென்சாரில் சிக்கியது என்பதும் சென்சார் சான்றிதழ் தர முடியாது என சென்சார் அதிகாரிகள் கூறினார்கள் என்பதும் தெரிந்ததே 
 
மேலும் மேல்முறையீடு செய்ய முடியாத வகையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சமீபத்தில் மத்திய அரசால் கலைக்கப்பட்டது என்பதால் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் தான் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தில் உச்ச நட்சத்திரம் என்ற ஒரு கேரக்டர் இருப்பதாகவும், அந்த கேரக்டரை அவமதிக்கும் வகையில் பல காட்சிகள் இருப்பதாகவும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே கோபி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 
 
இதனையடுத்து அந்த உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் ஆகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள். அப்படி என்றால் மத்திய அரசிடம் தனது செல்வாக்கை வைத்து இந்த படத்தை தடைசெய்ய ரஜினி தானா? என்று கேள்வியையும் பலர் எழுப்பியுள்ளனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்