அண்ணாத்த ஷூட்டுக்கு கிளம்பிய ரஜினிகாந்த்!

Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (18:02 IST)

ரஜினிகாந்த் தேர்தலில் வாக்களித்த பின்னர் இன்று ஹைதராபாத்துக்கு அண்ணாத்த படத்தின் ஷூட்டுக்கு சென்றுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினியின் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இப்போது சென்னையில் சில நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தேர்தலில் வாக்களித்த பின்னர் ரஜினிகாந்த் ஐதராபாத்துக்கு தனி விமானத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுவிட்டாராம்.இதில் மேலும் படிக்கவும் :