ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: சனி, 3 ஏப்ரல் 2021 (20:21 IST)

ரஜினி பட நடிகைக்குக் கொரோனா...ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் மக்களும் , விளையாட்டு வீர்ர்களும், திரை சினிமா நட்சத்திரங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில், கார்த்தி,சூர்யா, கெளரி கிஷான் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று தர்பார் பட நடிகை ஒருவர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்த நடிகை நிவேதிதா தாமஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,  தான் விரைவில் இத்தொற்றிலிருந்து குணமாகிவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.