1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 2 மே 2017 (22:16 IST)

இம்புட்டு நீளமான உடை அணிந்து என்ன பிரயோஜனம்? மறைக்க வேண்டியதை மறைக்கலையே!

மேட் காலா ஃபேஷன் உலகின் அகடாமி விருதுகள் விழாவில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நீளமான உடையை அணிந்து வந்ததையும் அந்த உடை சமூக வலைத்தளங்களில் வைரலானதையும் ஏற்கனவே பார்த்தோம்.

 


 


ஒரு பக்கம் இந்த உடை வைரலாகி வந்தபோதிலும், இன்னொரு பக்கம் இந்த உடையை நெட்டிசன்கள் வச்சு செஞ்சு வருகின்றனர். கிட்டத்தட்ட இருபது முதல் முப்பது அடிக்கு இந்த உடையின் நீளம் இருந்தாலும் இந்த உடை பிரியங்காவின் தொடை மற்றும் மார்பின் பெரும்பகுதியை மறைக்கவில்லை. இவ்வளவு பெரிய உடை இருந்தும் மறைக்க வேண்டியதை மறைக்கவில்லை என்றால் அது என்ன உடை? என்று நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

ஃபேஷன் என்ற பெயரில் இதுபோன்று கோமாளித்தனமாக உடை அணியும் கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் வேண்டுமானால் பிரபலமாக இருக்கலாம். இந்திய கலாச்சாரத்திற்கு இந்த உடை ஏற்றது அல்ல என்றும், இதை பார்த்து இளம்பெண்களும் கலாச்சார சீரழிவை நோக்கி செல்வார்கள் என்றும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.