ஒல்லி இசையமைப்பாளரை ஒதுக்கிய ஒல்லி நடிகர்

cauveri manickam| Last Modified வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (15:21 IST)
ஒல்லி இசையமைப்பாளரிடம் இருந்து அறவே ஒதுங்கிவிட்டார் ஒல்லி நடிகர் என்கிறார்கள். 
ஒல்லி நடிகரின் படத்தின் மூலம் இசையமைப்பாளரானார் அந்த ஒல்லி. ஒல்லி நடிகரின் மாமனாருக்கு நெருங்கிய சொந்தம் இந்த இசையமைப்பாளர். நகமும் சதையுமாக இருந்தனர் இரண்டு ஒல்லிகளும். யார் கண்பட்டதோ தெரியவில்லை… சிவ நடிகருடன் ஒல்லி இசையமைப்பாளர் சேர்ந்துவிட, ஒல்லி நடிகர் மட்டும் தனித்துவிடப்பட்டார்.

எனவே, வேறொரு இசையமைப்பாளரை தன் படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார் ஒல்லி நடிகர். அந்த இசையமைப்பாளரும் திறமையானவர்தான். ஆனால், ஒல்லி நடிகர் – ஒல்லி இசையமைப்பாளர் காம்போ அளவுக்கு வரவில்லை. சமீபத்தில் வெளியான ஒல்லி நடிகர் நடித்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும், முதல் பாகம் அளவுக்கு இல்லை.

இந்நிலையில், பெரிய மீசை வைத்து ஒல்லி நடிகர் நடித்த இரண்டெழுத்து படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதன் முதல் பாகத்துக்கு ஒல்லி தான் இசை அமைத்தார். ஆனால், அவரிடம் சேரவே கூடாது என ஒல்லி நடிகர் சபதம் எடுத்திருப்பதால், இரண்டாம் பாகத்துக்கு வேறொரு இசையமைப்பாளரைத் தேடி வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :