1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. sky actress very sad for his movie issue

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி… கண்ணீரில் தவிக்கும் நடிகை

ஒரு பக்கக் கதை
தான் நடித்த தமிழ்ப் படங்கள் எதுவுமே ரிலீஸ் ஆகாததால், கண்ணீரில் தவிக்கிறார் நடிகை.
 




காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக ‘ஒரு பக்கக் கதை’ படத்தில் அறிமுகமானவர் இந்த நடிகை. சென்னையைச் சேர்ந்த இந்த நடிகை, அழகோ அழகு. ஆனால், அந்தப் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. அதற்கடுத்து ஸ்டைலிஷ் இயக்குநர் படத்தில் ஒல்லி நடிகருக்கு ஜோடியாக கமிட்டானார். அந்தப் படம் இன்னும் முடியாமல் பாதியிலேயே நிற்கிறது.

இந்நிலையில், தெலுங்குப் படமொன்றில் நிதின் ஜோடியாக கமிட்டானார். நல்லவேளை, அந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், சொந்த மொழியில் பெரிய ஆளாக வேண்டும் என்பதுதான் ஆசையாம். எனவே, தமிழ்ப் படங்கள் எப்போது ரிலீஸாகும் என கண்ணீருடன் காத்திருக்கிறார்.
About Writer
cauveri manickam
அடுத்த கட்டுரையில்
இந்த கவர்ச்சி போதுமா?..இன்னும் கொஞ்சம் வேணுமா? - களம் இறங்கிய நிகிஷா பட்டேல்