இரண்டாவது நிதித்தொகுப்பு! பிரதமருடன் நிதியமைச்சர் ஆலோசனை!

Last Updated: சனி, 2 மே 2020 (17:52 IST)

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது நிதித்தொகுப்பு வழங்குவது குறித்து பிரதமருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 39 நாட்கள் கடந்துள்ளன. இந்நிலையில் ஊரடங்கால் வருவாய் இழந்த மக்களுக்கு மத்திய அரசு முதல் மார்ச் மாதம் 26-ம் தேதி ரூ.1.77 லட்சம் கோடி மதிப்பில் முதல் கட்ட பொருளாதார நிதித்தொகுப்பை அறிவித்தது. ஆனால் அதன் மூலம் அனைத்து மக்களையும் கவரவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் இரண்டாவது நிதித்தொகுப்பு வெளியாக உள்ளது. இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :