‘மில்க்’ நடிகையின் அதிர்ஷ்டக் காற்று

Cauveri Manickam| Last Updated: செவ்வாய், 2 மே 2017 (16:46 IST)
கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகுதான், மில்க் நடிகையின் வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியிருக்கிறது. கன்னடத்தில் சுதீப் ஜோடியாக அவர் நடித்த ‘ஹெப்புல்லே’ படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது. இதனால்,  கன்னடத்தில் மில்க் நடிகை டாப் இடத்துக்குப் போயிருக்கிறார்.

 
 
அதுமட்டுமல்ல, ‘திருட்டுப் பயலே – 2’, ‘வேலையில்லா பட்டதாரி – 2’, ‘மின்மினி’, ‘பாஸ்கர் த ராஸ்கல்’ ரீமேக்,  பெயரிடப்படாத படம் என தமிழில் ஐந்து படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன. மேலும், ‘குயின்’ ரீமேக் உள்பட மூன்று  மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். ‘ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்’ என்பார்கள். மில்க் நடிகைக்கு சொர்க்க வாசலே திறந்திருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :