வியாழன், 9 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 13 நவம்பர் 2014 (11:47 IST)

ஐம்பது நாள் தாண்டியும் ஆவேசம் குறையாத இயக்குனர்

ஐம்பது நாள் தாண்டியும் ஆவேசம் குறையாத இயக்குனர்
ஜில் தண்டா படத்தை இயக்கியவர் அப்படத்தின் தயாரிப்பாளர் மீது இன்னும் சீற்றம் குறையாமலே இருக்கிறார்.
 
தண்டா படம் தயாராகி பல வாரங்கள் ஆன பிறகும் தயாரிப்பாளர் படத்தை வெளியிடாமலே இருந்தார். படத்தின் நீளத்தை குறைக்க வேண்டும் என்ற தயாரிப்பாளரின் கோரிக்கையை இயக்குனர் நிராகரித்தது நீயா நானா போட்டியில் அவர்களை கொண்டு வந்துவிட்டது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவித்த பிறகு, ஒல்லி நடிகரின் படத்துக்காக வெளியீட்டு தேதியை இயக்குனரின் கவனத்துக் கொண்டு வராமலே மாற்றினார் தயாரிப்பாளர். பரஸ்பரம் இருவரும் தாக்கி பேட்டி தந்தனர்.
 
ஒரு படம் பத்து தினங்கள் ஓடினாலே சக்சஸ்மீட், போஸ்டர் என்று கொண்டாடுகிற சினிமாவில் தண்டா படம் ஐம்பது தினங்கள் கடந்தும் சின்ன போஸ்டர்கூட அடிக்கவில்லை தயாரிப்பாளர். வேண்டுமென்றே என் படத்தை இருட்டடிப்பு செய்துவிட்டார் என கோபத்தில் இப்போதும் குமுறுகிறார் இயக்குனர்.