1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (15:03 IST)

கடுப்பில் பிரமாண்ட இயக்குநர்

உச்ச நட்சத்திரத்தை வைத்து இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ள பிரமாண்ட இயக்குநர், இன்னொரு இயக்குநர் மீது ஏகக்  கடுப்பில் இருக்கிறாராம்.

 
உச்ச நட்சத்திரத்தை வைத்து ரோபோ கதையை இயக்கியுள்ளார் பிரமாண்ட இயக்குநர். அந்தப் படத்துக்கு, இதுவரை ஃபர்ஸ்ட்  லுக் மட்டுமே வெளியாகியுள்ளது. அதைத்தவிர படத்தின் வெறெந்த தகவல்களோ, புகைப்படங்களோ வெளியாகிவிடக் கூடாது என்பதில் தீவிர கவனத்துடன் இருக்கிறார் பிரமாண்டம். ஆனால், அதையும் மீறி ஒன்றிரண்டு தகவல்கள் வெளியில் கசிந்து  கொண்டுதான் இருக்கின்றன.
 
உச்ச நட்சத்திரத்தை வைத்து தற்போது படத்தை இயக்கிவரும் இயல்பான இயக்குநர், படத்தின் தலைப்பையும், ஃபர்ட்ஸ்  லுக்கையும் ரிலீஸ் செய்துவிட்டுத்தான் ஷூட்டிங்கையே ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல, முதல்நாள் படப்பிடிப்பு முடிந்த உடனேயே, அன்று மாலையே சுடச்சுட சில புகைப்படங்களையும் வெளியிட்டார். தினமும் ஏதாவது ஒரு புகைப்படம்  வெளிவந்து, அது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.
 
இதைக் கண்டு கடுப்பான பிரமாண்ட இயக்குநர், தன் படத்தில் இருந்து சில புகைப்படங்களைக் கசியவிட்டார். ஆனால்,  ஒன்றிரண்டு பேரைத் தவிர அதைச் சீண்டுவார் இல்லை. எல்லோருமே இயல்பான இயக்குநர் புகைப்படங்களையே ஷேர்  செய்ய, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய போல பிரமாண்ட கடுப்பில் இருக்கிறாராம் பிரமாண்ட இயக்குநர்.