1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Updated : வெள்ளி, 9 ஜூன் 2017 (14:38 IST)

பட்டம் கொடுத்து சிவகார்த்திகேயனிடம் மறைமுகமாக கால்ஷீட் கேட்ட தயாரிப்பாளர்

நேற்று நடைபெற்ற ஒரு சினிமா விழாவில், சிவகார்த்திகேயனுக்கு ‘இளம் சூப்பர் ஸ்டார்’ பட்டம் வழங்கப்பட்டது.

 
தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இன்பசேகரன் இந்தப் படத்தை இயக்க, டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
 
சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, டிரெய்லரை வெளியிட்டார். அப்போது பேசிய தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்,  சிவகார்த்திகேயனை ‘இளம் சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்டார். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பு ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் கொடுத்த கலைப்புலி எஸ். தாணு, கடந்த வருடம்தான் ரஜினியை வைத்து ஒரு படம் தயாரித்தார். ஆனால், ‘புலி’ படத்தைத் தயாரித்த பி.டி.செல்வகுமார், விரைவில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தயாரிப்பார் என்று  நம்புவோமாக…