திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Murugan)
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (12:25 IST)

நம்பர் நடிகை மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிரம்

பெரிய நம்பர் நடிகை மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கம் தீவிரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.


 

 
15 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து, இப்போதும் முன்னணியில் இருக்கிறார் பெரிய நம்பர் நடிகை. அவரை படங்களில் புக் செய்தால், ‘ஷூட்டிங் மட்டுமே வருவேன். இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த புரமோஷனுக்கும் வரமாட்டேன்’ என்ற கண்டிஷனோடுதான் ஓகே சொல்வார்.
 
அவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம், சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை அவர் மேனேஜர் தயாரித்ததாக சொன்னாலும், நடிகையின் பணம்தான் இறங்கியிருக்கிறதாம்.இதனால்தான் அந்த டிவி நிகழ்ச்சியில் மட்டும் தனியாகப் பேட்டி கொடுத்தாராம்.
 
அத்துடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை காசி, உதயம் மற்றும் கமலா தியேட்டர்களுக்கு விசிட் அடித்த நடிகை, ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்த்தார். இது, தயாரிப்பாளர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நம்ம படத்தின் புரமோஷனுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு, அவர் காசு போட்டு எடுத்த படத்துக்கு மட்டும் புரமோஷன் பண்றாரே...’ என்று சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்கிறார்கள்.