திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 மே 2018 (15:03 IST)

மின்னல் வேக விற்பனை; குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுத்த சியோமி

சியோமி நிறுவனத்தின் மீது ஸ்மார்ட்போன் விற்பனை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

 
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலம்தான் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலே ஸ்மார்ட்போன்கள் விற்று தீர்ந்து விடுகிறது. மின்னல் வேகத்தில் லட்ச கணக்கில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகிவிடுகிறது.
 
விற்பனை நாளன்று விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையை அந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம். இதற்கு மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உள்பட பலரும், சியோமி நிறுவனம் விற்பனையை அதிகரிக்க போலியான டிமெண்டை உருவாக்கி வருகிறது என்று குற்றம்சாட்டினர்.
 
இந்த குற்றச்சாட்டை சியோமி நிறுவனம் முற்றிலும் மறுத்து வருகிறது. அதற்கான விளகத்தையும் கொடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய சியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனுகுமார் ஜெயின் கூறியதாவது:-
 
அதிகப்படியான தேவை இருக்குமென்றால் அதைச்  சமாளிக்க முன்கூட்டியே அதிக அளவில் போன்களை தயாரித்து வைக்கலாமே என்று பலர் எங்களிடம் கேட்கிறார்கள். சரிதான். ஆனால், அவை விற்காமல் போனால் அந்த நஷ்டத்தை யார் ஏற்றுக்கொள்வார்கள் 
 
தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களை ஸ்டாக் வைப்பதில்லை. ஒவ்வொரு வாரமும் தயாரிக்கப்படும் போன்கள் அடுத்த வாரமே விற்பனை செய்யப்பட்டு விடுகின்றன என்று கூறியுள்ளார்.
 
மேலும் IDC அறிக்கையில் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மில்லியன் கணக்கில் விற்பனை செய்யப்பட்டது தெரிவிக்கப்பட்டுள்ளது.