கூகுளில் மக்கள் அதிகம் தேடிய பிரபலங்கள் யார்...யார்...?
கூகுள் தேடு பொரியில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம் போல சினிமா தாக்கங்கள் இணையதளத்தில் அதிகம் காணப்பட்டாலும் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக இந்தியர்கள் 2018 பிபா உலககோப்பை குறித்து தேடியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதில் இரண்டாம் இடத்தில் கிரிக்கெட் ஆர்வலர்கள் லைவ் ஸ்கோர் என்ற வார்த்தையில் அவ்வப்போதைய கிரிகெட் நிலவரத்தை அறிந்து கொள்ள வேண்டி இதை தேடி உள்ளனர்.
மே மாதத்தில் கோலாகலமாக நடக்கும் ஐபிஎல் திருவிழா குறித்து மக்கள் அதிகம் தேடி உள்ளனதாகவும் தெரிவிக்கின்றன.
மேலும் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் கண்களால் இளைஞர்களைக் கட்டிப்போட்ட பிரியாவாரியர் முதல் இடத்திலும், ஷங்கரின் 2.0 அதிகம் தேடப்பட்ட படங்களில் முதலிடத்தில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.