இனி வாட்ஸ் ஆப்-இல் வீடியோ காலிங்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 27 அக்டோபர் 2016 (14:13 IST)
பிரபலமான ஆப்ஸ்களில் ஒன்றான வாட்ஸ்ஆப் பல்வேறு பயன்களை வழங்குகின்றது. அவ்வாறு வாட்ஸ் ஆப் பீட்டா பதிப்பில் வீடியோ கால் அம்சம் வழங்கப்பட்டு விட்டது. 

 
 
டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால்:
 
முதலில் வாட்ஸ்ஆப் புதிய பீட்டா ஆப்பினை டவுன்லோடு செய்ய வேண்டும். 
 
பின்னர், செயலியினை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதற்குக் கருவியின் settings> Security> Enable unknown sources ஆப்ஷன்களைச் செயல்படுத்த வேண்டும்.
 
காண்டாக்ட்:
 
வாட்ஸ்ஆப் செயலியினை ஓபன் கால் மேற்கொள்ளக் காண்டாக்ட் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். 
 
இதற்கான ஆப்ஷனினை கிளிக் செய்ததால் வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் என இரு ஆப்ஷன்களைப் பார்க்க முடியும்.
 
குறிப்பு:
 
இதில் வாட்ஸ்ஆப் பீட்டா ஆப் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வீடியோ கால் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற ஆப் பதிப்புகளுக்கு வீடியோ கால் செய்ய இயலாது.

 


இதில் மேலும் படிக்கவும் :