1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (11:06 IST)

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துவது இந்த பாஸ்வேர்ட்தான்! – ஆய்வில் தகவல்!

Password
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பலரும் இணையத்தை பயன்படுத்தும் நிலையில் பெரும்பாலும் ஒரே மாதிரியான பாஸ்வேர்டை பயன்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.



இந்தியர்கள் பலரது கைகளிலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் உள்ள நிலையில் இமெயில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பலத்தரப்பட்ட இணையதள கணக்குகளை தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த இணைய கணக்குகளுக்கு பயனாளர் பெயர், கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) தேவைப்படும் நிலையில் பலரும் பாஸ்வேர்ட் மறந்து விடக் கூடாது என்பதற்காக எளிமையான பாஸ்வேர்டை தருகிறார்கள்.

இந்தியா முழுவதும் பெரும்பாலான பயனாளர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாஸ்வேர்ட்களை பயன்படுத்துவதாக Nordpass என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான மக்கள் 123456 என்ற எண்ணைதான் பாஸ்வேர்டாக பயன்படுத்துகிறார்களாம். அதுபோல பாஸ்வேர்டையே Password என வைப்பது, Admin, Pass@123 என்ற பாஸ்வேர்ட்களும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறதாம். இந்த ஆண்டில் மட்டும் ஒவ்வொரு தனிப்பயனரும் 3.6 லட்சம் முறை 123456 என்ற பாஸ்வேர்டை பயன்படுத்தியுள்ளனராம்.

இதனால் பாஸ்வேர்டுகளை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும் என்பதால் தகவல்கள் திருடப்படவும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K