செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (20:23 IST)

சாதனை படைத்தது டெஸ்லா: மூன்று மாதத்தில் 95,200 கார்கள் விற்பனை

உலகில் மிக பிரபலமான கார் கம்பேனிகளில் ஒன்று டெஸ்லா. கடந்த மூன்று மாதங்களில் இதுவரை எந்த கார்களும் விற்காத அளவுக்கு டெஸ்லா மாடல் கார்கள் விற்று தீர்ந்திருக்கின்றன.

டெஸ்லா கம்பேனியின் 3 சீடென் என்ற மாடல் ஏப்ரல்-ஜூன் மாதத்திற்குள்ளாக 72 ஆயிரத்து 631 கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே மூன்று மாதத்திற்குள் இந்த மாடல் 77 ஆயிரத்து 550 மாடல்கள் விற்றிருக்கின்றன. அதேபோல் எஸ்.எக்ஸ் என்ற புதிய மாடல் கார்கள் மொத்தம் 14 ஆயிரத்து 517 தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் விற்பனையானதோ 17 ஆயிரத்து 650 கார்கள்.

அதாவது மூன்று மாதத்தில் உற்பத்தி செய்யும் கார்களின் எண்ணிக்கையை விட விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த புதிய சாதனையால் டெஸ்லாவின் வணிக புள்ளிகள் உச்சத்தை அடைந்திருக்கிறது.

இது குறித்து அதன் பங்குதாரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது வாழ்த்துகளை டெஸ்லா நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார். மேலும் அவர் 3 சீடென் மாடல் கார்களை அதிகம் வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய மதிப்பில் 3 சீடென் மாடலின் விலை 75 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.