ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (17:16 IST)

ஜியோ ரீசார்ஜ் செய்தால் ஸ்விக்கி சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்!

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ இந்த பண்டிகைக் காலத்தில் சிறப்பு ரீசார்ஜ் பேக்கை வழங்குகிறது.இந்தியாவில் ஜியோ தொலைத்தொடர்பு சேவைகளை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், ஜியோ நிறுவனம் அவ்வபோது பல ரீசார்ஜ் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.866 ப்ரீபெய்டு ப்ளானில் புதிய சலுகைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ.866 ரீசார்ஜ் ப்ளான் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா + அன்லிமிடெட் 5ஜி சேவை வழங்கப்படுகிறது. உடன் அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ் தினசரி அனுப்ப முடியும். 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ளானை ரீசார்ஜ் செய்தால் ஸ்விகி ஒன் லைட் சப்ஸ்க்ரிப்ஷன் 3 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Edit by Prasanth.K