1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 ஜூலை 2024 (12:56 IST)

அதிரடியாக களம் இறங்கிய Samsung Galaxy Z Flip 6..! லட்ச ரூபாய்க்கு வொர்த்தா?

Samsung Galaxy Z Flip 6

சாம்சங் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் இருந்த Samsung Galaxy Z Flip 6 மற்றும் Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போன்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உலக அளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி சந்தையில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் சாம்சங். ஆண்டுதோறும் பல மாடல் ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களை வெளியிடும் சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை நேற்று வெளியிட்டது. அதில் பெரும்பாலோனாரால் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy Z Flip 6 மற்றும் Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Samsung Galaxy Z Flip 6 மாடலானது ஒரு ஸ்மார்ட்போனை கீழிருந்து மேலாக இரண்டாக மடித்துக் கொள்ளும் வகையில் வந்துள்ளது. Samsung Galaxy Z Fold 6 மாடலானது இடமிருந்து வலம் மடிக்கும் வகையில் உள்ளது. விரிந்த நிலையில் ஒரு Tab அளவுக்கு அகலமாகவும், மடித்த நிலையில் ஒரு ஸ்மார்ட்போன் அளவிலும் இது இருக்கும். இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம்.
 

Samsung Galaxy Z Flip 6

 Samsung Galaxy Z Flip 6 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

6.7 இன்ச் LTPO அமோலெட் டிஸ்ப்ளே

மடிக்கக்கூடிய டூவல் டிஸ்ப்ளே வசதி

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 3 சிப்செட்

3.3 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்

12 ஜிபி ரேம்

256 ஜிபி / 512 ஜிபி இண்டெர்னல் மெமரி

மெமரி கார்ட் ஸ்லாட் கிடையாது

50 எம்பி + 12 எம்பி ப்ரைமரி டூவல் கேமரா

10 எம்பி முன்பக்க செல்பி கேமரா

4000 mAh பேட்டரி, 25 W பாஸ்ட் சார்ஜிங்

15 W வயர்லெஸ் சார்ஜிங், 4.5 W ரிவர்ஸ் சார்ஜிங்

இந்த  Samsung Galaxy Z Flip 6 ஸ்மார்ட்போன் Crafted Black, White, Peach நிறங்களில் லிமிடெட் எடிஷனாகவும், Blue, Mint, Silver Shadow நிறங்களில் வழக்கமான எடிஷனாகவும் கிடைக்கிறது.

இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.1,09,999 ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.1,21,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24 முதல் இந்த மாடல் ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடங்கும் நிலையில், இன்று முதல் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.

Edit by Prasanth.K