திங்கள், 15 ஏப்ரல் 2024
 1. செய்திகள்
 2. தகவல் தொழில்நுட்பம்
 3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (11:18 IST)

Samsung Galaxy S24, Plus, Ultra.. வெவ்வேறு வேரியண்ட்களில் அசத்தல்! – எது பெஸ்ட்?

Samsung Galaxy S24 Series
சாம்சங் புதிதாக வெளியிடும் Samsung Galaxy S2 சிரிஸ் தற்போது ஸ்மார்ட்போன் பயனாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் வேரியண்ட்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.ஸ்மார்ட்போன் விற்பனையில் பிரபலமாக உள்ள சாம்சங் நிறுவனம் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தனது புதிய Samsung Galaxy S24 சிரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Samsung Galaxy S24 சிரிஸானது Samsung Galaxy S24, Samsung Galaxy S24 Plus மற்றும் Samsung Galaxy S24 Ultra என மூன்று வேரியண்டுகளில் கிடைக்கிறது.

Samsung Galaxy S24 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

Samsung Galaxy S24

 • 6.2 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரெஷ் ரேட்
 • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 3
 • ஆண்ட்ராய்டு 14 OS
 • 8 ஜிபி ரேம்
 • 256 ஜிபி / 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
 • 50 எம்பி + 12 எம்பி + 10 எம்பி ட்ரிபிள் ப்ரைமரி கேமரா
 • 12 எம்பி முன்பக்க செல்பி கேமரா
 • அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக்
 • 4000 mAh பேட்டரி, 25W வயர் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங்
 
இந்த Samsung Galaxy S24 மாடல் ஓனிக்ஸ் ப்ளாக், மார்பிள் க்ரே, கோபால்ட் வயலெட், ஆம்பர் யெல்லோவ் ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.79,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடல் ரூ.89,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Samsung Galaxy S24 Plus ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

Samsung Galaxy S24 Plus

 • 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரெஷ் ரேட்
 • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 3
 • ஆண்ட்ராய்டு 14 OS
 • 12 ஜிபி ரேம்
 • 256 ஜிபி / 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
 • 50 எம்பி + 12 எம்பி + 10 எம்பி ட்ரிபிள் ப்ரைமரி கேமரா
 • 12 எம்பி முன்பக்க செல்பி கேமரா
 • அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக்
 • 4900 mAh பேட்டரி, 45W வயர் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங்
 
இந்த Samsung Galaxy S24 Plus மாடல் ஓனிக்ஸ் ப்ளாக், மார்பிள் க்ரே, கோபால்ட் வயலெட், ஆம்பர் யெல்லோவ் ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.99,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடல் ரூ.1,09,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

Samsung Galaxy S24 Ultra

 • 6.8 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரெஷ் ரேட்
 • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 3
 • ஆண்ட்ராய்டு 14 OS
 • 12 ஜிபி ரேம்
 • 256 ஜிபி / 512 ஜிபி / 1 டிபி இண்டெர்னல் மெமரி
 • 200 எம்பி + 12 எம்பி + 50 எம்பி ட்ரிபிள் ப்ரைமரி கேமரா
 • 12 எம்பி முன்பக்க செல்பி கேமரா
 • அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக்
 • 5000 mAh பேட்டரி, 45W வயர் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங்
 
இந்த Samsung Galaxy S24 Ultra மாடல் டைட்டானியம் க்ரே, டைட்டானியம் ப்ளாக் மற்றும் டைட்டானியம் வயலெட் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.1,29,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடல் ரூ.1,39,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடல் ரூ.1,59,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த Samsung Galaxy S24, Plus, Ultra ஆகிய மாடல்களுக்கான முன்பதிவு சாம்சங் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கியுள்ளது.

Edit by Prasanth.K