மேலும் ரூ.18,000 கோடி: கதிகலங்கும் ஜியோ போட்டியாளர்கள்!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 27 ஏப்ரல் 2017 (10:29 IST)
குறைந்த காலத்தில் மிகப்பெரிய முதலீட்டுடன் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்ற டெலிகாம் நிறுவனம் ஜியோ.

 
 
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ நிறுவனத்தில் 1.75 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்தது. பல இலவச சேவைகளை ஆறு மாதங்கலுக்கு வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்தது.
 
இந்நிலையில், முகேஷ் அம்பானி தற்போது கூடுதலாக 18,000 கோடி ரூபாயை ஜியோவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார். இதன் மூலம் ஜியோ நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடு அளவு 2 லட்சம் கோடி ரூபாயாக உயர உள்ளது.
 
மேலும், ஜியோ அறிவித்துள்ள தன் தானா தன் ஆஃபர் அடுத்த 18 மாதங்கள் வரை தொடரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனால் ஜியோவிற்கு போட்டியாக உள்ள மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :