எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம்...பெட்ரோல் விலை குறையுமா...? வாகன ஓட்டிகள் ஆர்வம்

petrol
Last Updated: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (14:15 IST)
நம் நாட்டில்  கடந்த சில மாதங்களாக  பெட்ரோல். டீசல் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டு ஒரு லிட்டர் பெட்ரோ 90  ரூபாய்க்கு மேல் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள்  பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
ஆனால் அண்மைக்காலமாக பெட்ரோல் டீசல் விலை குறைந்து வருவது சற்று ஆறுதல் அடையச்செய்தது. இவ்விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்துதான் இந்தியாவிலும் பெட்ரோல்.டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டது.பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நாட்டில் அத்தியாசியப் பொருட்களின் விலையையும் உயர்ந்தது.
 
தற்போது பெட்ரோலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக்  வாகனங்களைப் பயன்படுத்துவது தான் ஒரே தீர்வாகக் கருதப்பட்டது.மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
petrol
பிரதமர் மோடி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகங்கள் பயன்பாட்டை அதிகரிப்பதில் முனைப்பாக உள்ளார். அதாவது வரும் 2030 ஆண்டுக்குள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு 30 % இருக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில் எலெக்ட்ரிக் வாகங்களின் விலை அதிகமாக உள்ள நிலையில் இதற்கு வெளிநாட்டிலிருந்து பாகங்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட பாகங்கள் அசம்பல் செய்யப்பட்ட வாகனத்தின் விலை வரியுடன் சேர்த்து அதிகமாக விற்கப்படுகிறது.
petrol
எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.பின்னர் 10 முதல் 15 சதவீதம் வரை வரியும் குறைக்கப்பட்டது.
 
மேலும் நம் நாட்டில் எலெக்ட்ரிக் வாகனக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டால் கச்சா எண்ணெய் பயன்பாடு குறையும் என்று கருதப்படுகிறது.
petrol
ஆனால் இதெல்லாம் விரைவில் சாத்தியமாகாது என்று பேச்சும் அடிபடுகிறது. அதேசமயம் பெட்ரோல் . டீசலுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மத்திய அரசு  குறைக்க வேண்டும் என பலதரப்பிலும் இருந்து கோரிக்கை வலுத்து வருகின்றன.மோடி அரசு இன்று அறிவித்துள்ள மத்திய பட்ஜெட் அதற்கு வழிவகுத்துள்ளதா என்பது குறித்து மக்கள்தான்  யோசித்து அடுத்து வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு என்ற தீர்பளிக்க வேண்டும் என்ற விமர்சனங்களை பலரும் எழுப்பி வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :