Daily Horoscope
✕

அட்டகாசமான ரெட்மி நோட் 7 ப்ரோ: புதிய வேரியண்ட் இன்று முதல் அறிமுகம்

Updated: புதன், 3 ஜூலை 2019 (13:48 IST)
சியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட்ஃபோனின், நோட் 7 ப்ரோ புதிய வேரியண்ட் இன்று முதல் சந்தையில் விற்பனைக்கு வருகிறது.

சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனை, இந்திய அளவில் 2019 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது ரெட்மி நோட் 7 ப்ரோ, 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி.மெமரி, ஆகிய புது வேரியண்டுடன் ஃப்ளிப்கார்ட் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ரெட்மி நோட் 7 ப்ரோ, 4 ஜி.பி. ரேம் , 64 கி.பி. மெமரி, முறையே ரூ.13,999-க்கும், 6 ஜி.பி.ரேம், 128 ஜி.பி. மெமரி முறையே ரூ.16,999-க்கும் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அறிமுகம் செய்துள்ள, 6 ஜி.பி. ரேம், 64 ஜி,பி, மெமரி கொண்டுள்ள ரெட்மி நோட் 7 ப்ரோ ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனில், 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி.பிளஸ் வாட்டர் டிரப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஸ்னாப்டிராகன் 675 சிப்செட், 6 ஜிபி, ரேம், ஆண்ட்ராய்டு பை, MIUI 10 யூசர் கொண்டு இயங்குகிறது.

மேலும் 5 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் 13 எம்.பி.செல்ஃபி கேமரா, 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த புதிய வேரியண்ட் ரெட்மி நோட் 7 ப்ரோ, இன்று மதியம் 12.00 மணியிலிருந்து விற்பனை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

ரூ.2000 மேலான UPI பரிவர்த்தனை கட்டணம் ஒத்தி வைப்பு!..

ஈரான் - சவுதி அரேபியா மோதல்!.. இண்டிகோ விமானம் ரத்து!...

ஆயுத பூஜை, தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்!.. தமிழன் பார்த்திபன் அறிவிப்பு...

அதிமுகவிலிருந்து மேலும் 15 எம்.எல்.ஏ-க்கள் வெளியேற தயாராக உள்ளனர்.. செங்கோட்டையன்

நத்திங் போன்களுக்கு புதிய 'நத்திங் ஓஎஸ் 5.0' இயங்குதளம்.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments