1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Redmi M100 Pro Launched with MediaTek Dimensity 7300-Ultra and 50MP Camera

ரூ.33,000 விலையில் ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்.. இந்தியாவுக்கு எப்போது வரும்?

ரெட்மி M100 புரோ
ஷியோமி நிறுவனம் தனது ‘M’ தொடர் வரிசையில் புதிய ‘ரெட்மி M100 புரோ’  ) ஸ்மார்ட்போனை சீனா சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இப்போனில் 6.67 இன்ச் 1.5K OLED திரை மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. திரை பாதுகாப்பிற்கு கொர்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 சேர்க்கப்பட்டுள்ளது. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 7300-அல்ட்ரா பிராசஸர் இடம்பெற்றுள்ளது.
 
கேமராவை பொறுத்தவரை, பின்புறத்தில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்  வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராக்கள் உள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 20 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும், 5,500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாக்கும் IP68 ரேட்டிங் பெற பெற்றுள்ளது.
 
சீனாவில் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை  இந்திய மதிப்பில் சுமார் ரூ.33,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
நாடே உங்களை நம்பி இருக்கிறது.. நானும்தான்! - விருது விழாவில் முதல்வர் விஜய் பேச்சு