1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Infinix Hot 70 Pro Review: 144Hz Display, 6000mAh Battery and Unique Design Tested

இந்தியாவில் அறிமுகமான இன்ஃபினிக்ஸ் புதிய ஸ்மார்ட்போன்.. விலை எவ்வளவு?

இன்ஃபினிக்ஸ் ஹாட் 70 புரோ
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான இன்ஃபினிக்ஸ் ஹாட் 70 புரோ வை இந்தியாவில் ரூ.24,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இந்த போனின் மிக முக்கிய சிறப்பம்சமாக அதன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ள ஆக்‌டிவ் மேட்ரிக்ஸ் கியூப்   வசதி பார்க்கப்படுகிறது. இது நேரம், நோட்டிஃபிகேஷன், அழைப்புகளைக் காட்டுவதோடு, எளிய விளையாட்டுகளையும் ஆதரிக்கிறது. மேலும் இதில் டெம்பரேச்சர் மாறும்போது நிறம் மாறும் 'தெர்மோ ஆரஞ்ச்' மற்றும் இருட்டில் மின்னும் 'மிராஜ் கிரீன்' போன்ற கவர்ச்சிகரமான நிறங்கள் உள்ளன.
 
திரையைப் பொறுத்தவரை, 6.76 இன்ச் Full HD+ IPS டிஸ்ப்ளே உடன் 120Hz மற்றும் கேமிங்கிற்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 950 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளதால் திரையின் வெளிச்சம் போதுமானதாக உள்ளது.
 
செயல்திறனுக்கு மீடியாடெக் டைமன்சிட்டி 7100  சிப்செட் பயன்பாட்டில் உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் சோனி IMX882 முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.
 
6,000mAh திறன்கொண்ட மாபெரும் பேட்டரியை 45W வேகமான சார்ஜிங் மூலம் விரைவில் சார்ஜ் செய்ய முடியும். மேலும் XOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தில் இயங்கும் இந்த போனுக்கு 3 ஆண்டுகள் OS அப்டேட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
வினாத்தாள் கட்டணம் வசூலிக்க கூடாது.. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை...