செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (10:26 IST)

கேமிங் போன்களுக்கு மவுசு..! ஒரே நிமிடத்தில் 70 ஆயிரம் போன்கள் விற்ற ரெட்மி!

கேமிங் போன்களுக்கு மவுசு..! ஒரே நிமிடத்தில் 70 ஆயிரம் போன்கள் விற்ற ரெட்மி!
ரெட்மியின் புதிய வரவான கே40 என்ற கேமிங் மொபைல் நிமிடத்தில் 70 ஆயிரம் போன்கள் விற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஆண்டுதோறும் புதுப்புது வசதிகளுடன் பல்வேறு மாடல் போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் கேம்கள் விளையாடுவதற்கென்றே பிரத்யேக அம்சங்களுடன் கூடிய கே40 என்ற ஸ்மார்ட்போனை ரெட்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

12ஜிபி + 128ஜிபி வசதி கொண்ட மாடல் ரூ.42,600 மற்றும் 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் கொண்ட மாடல் ரூ.46,000 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்று இதற்கான பிரத்யேக விற்பனை தொடங்கிய நிலையில் ஒரே நிமிடத்தில் 70 ஆயிரம் போன்களும் விற்று தீர்ந்ததாக ரெட்மி தெரிவித்துள்ளது.