வியாழன், 30 நவம்பர் 2023
 1. செய்திகள்
 2. தகவல் தொழில்நுட்பம்
 3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (11:36 IST)

108 MP கேமரா.. தெறிக்கும் குவாலிட்டி..! Realme 11 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

Realme 11 5G
ரியல்மி நிறுவனம் பக்காவான கேமரா அம்சங்களுடன் தனது புதிய Realme 11 5G ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் பல புதிய மாடல் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களுடன் ரியல்மி நிறுவனம் தனது புதிய Realme 11 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Realme 11 5G சிறப்பம்சங்கள்:
 • 6.72 இன்ச் டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரெஷ் ரேட்
 • மீடியாடெக் டைமென்சிட்டி 6100 ப்ளஸ் சிப்செட்
 • 2.2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
 • 8 GB RAM + 8GB விர்ச்சுவல் RAM
 • 128 GB / 256 GB இண்டெர்னல் மெமரி
 • 108 MP + 2 MP டூவல் ப்ரைமரி கேமரா
 • 16 எம்பி செல்பி கேமரா
 • 5000 mAh பேட்டரி, 67 W SUPERVOOC சார்ஜிங்

இந்த Realme 11 5G ஸ்மார்ட்போன் க்ளோரி கோல்ட், க்ளோரி ப்ளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

Realme 11 5G ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.18,999 ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ரூ.19,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K