செவ்வாய், 6 ஜூன் 2023
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified புதன், 17 மே 2023 (16:11 IST)

200 MP கேமராவுடன் அசத்தலாக களமிறங்கும் Realme 11 Pro மற்றும் Realme 11 Pro Plus!

Realme 11 Pro
பிரபலமான ரியல்மி நிறுவனம் அட்டகாசமான கேமரா குவாலிட்டியுடன் கூடிய Realme 11 Pro ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் வெளியிடுகிறது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகமான மாடல்களை களமிறக்கி வரும் ரியல்மி நிறுவனம் தற்போது Realme 11 Pro, Realme 11 Pro Plus ஆகிய மாடல்களை ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.

லாவா அக்னி 2வை தொடர்ந்து இந்த Realme 11 Pro சிரிஸ் மாடல்கள் மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப்செட்டில் வெளியாகின்றன. Realme 11 Pro மாடலில் 100 MP (Wide angle) + 2 MP மேக்ரோ கேமராவும், Realme 11 Pro Plus மாடலில் 200 MP (Wide) + 8 MP (Ultra Wide) + 2 MP (macro) கேமராவும் உள்ளது.

Realme 11 Pro மாடலில் முன்பக்க செல்பி கேமரா 16 எம்.பியாகவும், Realme 11 Pro Plus ல் 32 எம்.பி முன்பக்க செல்பி கேமராவும் உள்ளது.

Realme 11 Pro ல் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்னல் மெமரியும், Realme 11 Pro Plus ல் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்னல் மெமரியும் உள்ளது. இரண்டிலுமே 8 ஜிபி எக்ஸ்ட்ரா விர்ச்சுவல் ரேம் உள்ளது.

Realme 11 Pro Plus


இரண்டு மாடல்களிலும் நவீன ஆண்ட்ராய்டு 13 OS உடன் ரியல்மி 4.0 வசதி உள்ளது. Realme 11 Pro மாடலில் மெமரி கார்டு ஸ்லாட் உண்டு. இது Realme 11 Pro Plus மாடலில் இல்லை.

5000 mAh பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட Realme 11 Pro மாடல் 67W Dart Charge வசதியை கொண்டுள்ளது. Realme 11 Pro Plus மாடலானது அதே 5000 mAh பேட்டரி மற்றும் 100W Super Dart Charge வசதியுடன் வெளியாகிறது.

Realme 11 Pro மற்றும் Realme 11 Pro Plus ஆகிய இரண்டு மாடல்களுமே ப்ளாக், க்ரீன், கோல்டு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் Realme 11 Pro மாடலில் விலை ரூ.19,999 ஆகவும், Realme 11 Pro Plus ன் விலை ரூ.23,999 ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K