Nothing அறிமுகம் செய்யும் புதிய AI வசதி.. நாம் பேசுவதை உரையாக மாற்றி தரும்..!
லண்டனை சேர்ந்த Nothing நிறுவனம், தனது பயனர்களுக்காக Essential Voice என்ற புதிய AI வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சாதாரணமான Speech-to-text கருவியாக இல்லாமல், நாம் பேசும் போது இடையில் வரும் தேவையில்லாத சொற்களையும் தயக்கங்களையும் தானாகவே நீக்கி, மிக தெளிவான உரையாக மாற்றி தரும் தொழில்நுட்பமாகும்.
இந்த வசதி 100-க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிப்பதோடு, பேசும் போதே நேரலையில் மொழிபெயர்க்கும் திறனையும் கொண்டுள்ளது. பயனர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்த தொழில்நுட்பம் நாம் அனுமதிக்கும் போது மட்டுமே செயல்படும் என்றும், தரவுகள் என்க்ரிப்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாகச் செயலாக்கப்படும் என்றும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இது நத்திங் போன் (3)-இல் முதலில் அறிமுகமாகியுள்ளது. மேலும், இம்மாத இறுதியில் நத்திங் போன் (4a) ப்ரோ மற்றும் மே மாத தொடக்கத்தில் நத்திங் போன் (4a) ஆகியவற்றுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும்.
இதனுடன் Essential Space என்ற புதிய உற்பத்தித்திறன் மையத்தையும் நத்திங் அறிமுகம் செய்துள்ளது. இது ஸ்கிரீன்ஷாட்கள், குரல் குறிப்புகள் மற்றும் உரைகளை சேமித்து வைத்து, அவற்றை தானாகவே சுருக்கமாக மாற்றி தரும் ஒரு 'இரண்டாவது மூளை' போல செயல்படும். இதன் மூலம் பயனர்கள் தகவல்களை மிக எளிதாக நிர்வகிக்க முடியும்.
Edited by Siva

