1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Meta Plans to Lay Off 8,000 Employees by Next Month Amid AI Push

8000 பேர் வீட்டுக்கு போக தயாராக இருங்க.. ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

மெட்டா
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா அடுத்த மாதத்திற்குள் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் சுமார் 10 சதவீதமாகும். 
 
மே 20-ஆம் தேதி இந்த முதல் கட்டப் பணிநீக்கம் தொடங்கும் என்றும், ஆண்டின் இரண்டாம் பாதியில் மேலும் பல ஊழியர்கள் நீக்கப்படலாம் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து வரும் மெட்டா, தனது நிறுவன கட்டமைப்பை மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், மெட்டாவை ஒரு 'AI-மைய' நிறுவனமாக மாற்றும் நோக்கில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை செலவிட்டு வருகிறார். AI மூலம் வேலைப்பளுவை குறைத்து, நிர்வாக அடுக்குகளை சுருக்குவதே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே அமேசான் மற்றும் பிளாக் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இதேபோல் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கியுள்ளன. தொழில்நுட்ப துறையில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 73,000-க்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். மெட்டா நிறுவனம் தற்போது லாபத்தில் இயங்கி வந்தாலும், எதிர்கால தேவைகளை கருதி 'திறன்மிகு ஆண்டு' என்ற அடிப்படையில் இந்த அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி.. மற்ற 2 மசோதாக்களையும் தாக்கல் செய்யாத மத்திய அரசு..!